
அஸ்வெசும கொடுப்பனவுக்காக மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக பயனாளர்களிடம் இருந்து சுமார் முப்பதாயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்திற்கு பின்னர் குறித்த மேன்முறையீடுகள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழவினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மீளாய்வு நடவடிக்கைகளின் பின்னர் அனைத்து பிரதேச செயலாகங்களின் ஊடாக மேன்முறையீடுகள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment