சுகாதாரத்துறைக்கு 2 மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...




சிறுவர் பராமரிப்பிற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களும், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

நாட்டிற்கு தேவை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் இந்த சவாலான காலகட்டத்தை கடக்க நாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நிதி உடனடியாக நன்கொடையாக வழங்கப்படும் என்று SLC இன்று (25) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடைக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை (24) ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post