பாராளுமன்ற தேசிய பேரவை: செப்டெம்பர் 29 முதன் முறை கூடுகிறது...!


பாராளுமன்ற தீர்மானத்தின் மூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய பேரவை’ அங்குரார்ப்பணக் கூட்டம் நாளை மறுதினம் செப்டெம்பர் 29ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ‘தேசிய பேரவை’ இற்கு உள்வாங்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியல் சபாநாயகரினால் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post