சப்தகோசி உயர் அணை திட்டத்திற்கு உடன்பாடு...!


இந்தியா மற்றும் நேபாளம் சப்த கோசி உயர் அணைத் திட்டத்தை மேலதிக ஆய்வுகள் மூலம் முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.

நேபாள தலைநகர் கத்மண்டுவில் இரு தரப்பு மூத்த அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்தபோது இது பற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சப்த கோசி உயர் அணை, நேபாளத்தின் சப்தகோசி அணையில் பல்நோக்கு திட்டம் ஒன்றாக முன்மொழியப்பட்டது.

தென்கிழக்கு நேபாளம் மற்றும் வடக்கு பிஹாரில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவது மற்றும் நீர் மின் உற்பத்தி மேற்கொள்வது இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்காகும்.

Post a Comment

Previous Post Next Post