கஜிமாவத்தைக்குச் சென்ற முஜிபுர் ரஹ்மானுக்கு கடும் எதிர்ப்பு…!


தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள பாலத்துறை கஜிமாவத்தைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (28) காலை அப்பகுதிக்கு சென்றிருந்தபோது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முஜிபுர் ரஹ்மானின் வருகைக்கு அங்கிருந்த மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்

தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அவரிடம் வேண்டுகோளையும் விடுத்தனர்.

இது தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post