அமெரிக்க டொலரின் பெறுமதி உச்சம் தொட்டது....!


அமெரிக்க டொலரின் பெறுமதி 20 ஆண்டுகள் காணாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகளவில் அதிகரிக்கும் வட்டி வீதம் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில் இத்தகவல் வெளிவந்துள்ளது.

பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அமெரிக்க டொலர் வலுவடைவதற்குப் பங்களித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆசிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலர் குறியீடு 0.5 வீதம் அதிகரித்து சுமார் 114.70 என்ற புதிய உச்சத்தை எட்டியது. வலுவான அமெரிக்க டொலருக்கு நிகராக அவுஸ்திரேலிய டொலர், யூரோ ஆகியவற்றின் மதிப்பும் சரிந்தது. வெளிநாட்டு அளவில் பயன்படுத்தப்படும் சீனாவின் யுவான் நாணயத்தின் மதிப்பும் 11 ஆண்டுகள் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி இந்த மாத ஆரம்பத்தில் வட்டி வீதத்தை மீண்டும் அதிகரித்த நிலையிலேயே டொலரின் மதிப்பு உயிர்ந்துள்ளது.

பிரச்சினைக்குரிய நேரத்தில் தமது பணத்தை வைத்திருக்க டொலர் பாதுகாப்பானது என்று பல முதலீட்டாளர்களும் நம்புகின்றனர். இது ஏனைய நாணயங்களுக்கு எதிரான டொலரின் மதிப்பு அதிகரிக்க உதவியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post