’வெந்து தணிந்தது காடு’.. வெளியானது மல்லிப்பூ பாடலின் வீடியோ! ரசிகர்கள் மகிழ்ச்சி!



நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 15-ம் தேதி அன்று வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த ஹிட் பாடலான ‘மல்லிப்பூ’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. பாடலை பாடி இருந்த பின்னணி பாடகர் மதுஸ்ரீயின் காந்தக்குரலும் அதற்கு முக்கியக் காரணம்.

ஏ.ஆர். ரகுமான் இசையில், தாமரையில் தனித்துவம் மிக்க எழுத்தில் வெளியாகி இருந்த இப்பாடலுக்கு நடன இயக்குநராக பிருந்தா பணியாற்றி இருந்தார். பிரிந்துள்ள கணவனை நினைத்து மனைவி ஏக்கத்துடன் பாடும் பாடலை துள்ளல் நடனத்துடன் உயிருட்டி இருந்தார் பிருந்தா. இதன் வீடியோ வெர்ஷனை ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்த நிலையில், இன்று அதன் வீடியோ வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது படக்குழு.
 

மல்லிப்பூ பாடலில் பாடலாசிரியர் தாமரை வரிகளில் கையாண்டுள்ள தனித்துவ அம்சங்கள் மற்றும் பாடலில் ‘அடடே!’ அம்சங்கள் குறித்து நமது புதிய தலைமுறை தளத்தில் நெடுங்கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. 

Post a Comment

Previous Post Next Post