தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகைக்கு மோதிய முன்னணி நடிகர்களின் படங்கள்-10 வருட ரிப்போர்ட்!

TOP-DIWALI-CLASHES-IN-KOLLYWOOD-SINCE-2011-AND-10-years-10-deepavali-TAMIL-FILM-clashes

முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த நேரத்தில் வெளியானாலும், அதற்கென தனி மார்க்கெட் எப்போதும் உண்டு. ஏனெனில் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டம் என்பது மிகவும் பெரியது. மேலும், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டது போல் காட்சியளிக்கும். நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், இசை நிகழ்ச்சிகள், தோரணங்கள் என திரையரங்கே மகிழ்ச்சித் திடலில் திளைத்திருக்கும். அதுவும், இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது என்றால் போதும், போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் செய்யும் ரகளை பார்க்கவே வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை தினங்களில், இரண்டு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் போதும், அவ்வளவுதான். யாருடைய படம் நன்றாக இருக்கிறது, எவ்வளவு வசூல், யார் பெரிய நடிகர் என்ற விவாதமே நடக்கும். அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தீபாவளி தினத்தில் வெளிவந்த முன்னணி நடிகர்கள் படங்கள் குறித்து சிறு தொகுப்பாக பார்க்கலாம்.

image

2011 தீபாவளி திரைப்படங்கள் (26 அக்டோபர்):

1. வேலாயுதம் - விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி

2. 7ஆம் அறிவு - சூர்யா, ஸ்ருதிஹாசன்

இதில் ‘வேலாயுதம்’ படம் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், 60 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. இதேபோல் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘7 ஆம் அறிவு’ படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. மேலும் அந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் வசூலில் ‘7 ஆம் அறிவு’ படம்தான் முதலிடம் பிடித்தது.

image


2012 தீபாவளி திரைப்படங்கள் (13 நவம்பர்):

1. துப்பாக்கி - விஜய், காஜல் அகர்வால்

2. போடா போடி - சிம்பு, வரலஷ்மி

3. அம்மாவின் கைப்பேசி - சாந்தனு பாக்யராஜ், இனியா

இதில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, அந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக சாதனை செய்தது.

image

2013 தீபாவளி திரைப்படங்கள் (03 நவம்பர்):

1. ஆரம்பம் - அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி

2. பாண்டிய நாடு - விஷால், லக்ஷமி மேனன்

3. ஆல் இன் ஆல் அழகுராஜா - கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம்

அஜித்தின் ‘ஆரம்பம்’, விஷாலின் ‘பாண்டிய நாடு’ ஆகிய இரண்டு படங்களுமே ஓரளவுக்கு நல்ல வசூலை தந்தன.

image


2014 தீபாவளி திரைப்படங்கள் (23 அக்டோபர்):

1. கத்தி - விஜய், சமந்தா

2. பூஜை - விஷால், ஸ்ருதிஹாசன்

இதில் விஜய்யின் ‘கத்தி’ படம் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, 130 கோடி ரூபாய் வசூலித்தது. அதேநேரத்தில் விஷாலின் ‘பூஜை’ திரைப்படம் வரவேற்பைப் பெற தவறியது.

image


2015 தீபாவளி திரைப்படங்கள் (11 நவம்பர்):

1. தூங்காவனம் - கமல்ஹாசன், திரிஷா

2. வேதாளம் - அஜித், ஸ்ருதிஹாசன்

இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அஜித்தின் ‘வேதாளம்’ திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

image

2016 தீபாவளி திரைப்படங்கள் (30 அக்டோபர்):

1. கொடி - தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன்

2. காஷ்மோரா - கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா

3. திரைக்கு வராத கதை - நதியா, இனியா

இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், ரஜினிகாந்த், கமல் ஆகியோரின் படங்கள் வெளியாகவில்லை. அதேநேரத்தில் கார்த்தியின் ‘காஷ்மோரா’ திரைப்படம் நல்ல வசூலை ஈட்டினாலும், ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. எனினும் தனுஷின் ‘கொடி’ திரைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

image


2017 தீபாவளி திரைப்படங்கள் (18 அக்டோபர்):

1. மெர்சல் - விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா

2. மேயாத மான் - வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா

3. சென்னையில் ஒருநாள் 2 - சரத்குமார், நெப்போலியன், அஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தாண்டு வெளியானப் படங்களில் 260 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பிடித்தது. மேலும் உலக அளவில் இதுவரை அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் 7-வது இடத்தில் உள்ளது. ‘மேயாத மான்’ திரைப்படமும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.

image

2018 தீபாவளி திரைப்படங்கள் (20 அக்டோபர்):

1. சர்கார் - விஜய், கீர்த்தி சுரேஷ்

3-வது முறையாக ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணியில் தீபாவளிக்கு தனியாக வெளியான இந்தத் திரைப்படம் 243 கோடி ரூபாய் வசூலித்தது. மேலும் உலக அளவில் இதுவரை அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் 9-வது இடத்தில் உள்ளது.

image

2019 தீபாவளி திரைப்படங்கள் (27 அக்டோபர்):

1. பிகில் - விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப்

2. கைதி - கார்த்தி, நரேன்,

மீண்டும் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும், அந்தாண்டு வெளியானப் படங்களில் 305 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பிடித்தது. உலக அளவில் இதுவரை அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் 6-வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் திரையரங்குகள் குறைவாக கிடைத்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

image

2020 தீபாவளி திரைப்படங்கள் (14 நவம்பர்):

1. சூரரைப் போற்று - சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி

2. மூக்குத்தி அம்மன் - நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி

3. பிஸ்கோத் - சந்தானம், தாரா

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் திரைத்துறை நலிவடைந்த நிலையில், ஓடிடிக்கு வழிவகுத்த ஆண்டு எனக் கூறலாம். இதனால் கடும் போராட்டங்கள், எதிர்ப்புக்கு மத்தியில் அமேசான் பிரைமில் வெளியான ‘சூரரைப் போற்று’, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தன.

image

2021 தீபாவளி திரைப்படங்கள் (04 நவம்பர்):

1. அண்ணாத்தே - ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா

2. எனிமி - விஷால், ஆர்யா

3. ஜெய்பீம் - சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ்

ரஜினியின் ‘அண்ணாத்தே’ திரையரங்கிலும், சூர்யாவின் ‘ஜெய்பீம்’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகின. ‘அண்ணாத்தே’ படம் சீரியல் போன்று இருப்பதாக கடும் விமர்சனங்களை சந்தித்தாலும், அந்தாண்டு வெளியானப் படங்களில் 240 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பிடித்தது. உலக அளவில் இதுவரை அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் 10-வது இடத்தில் உள்ளது. இதேபோல் ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்தியாக ஒரு பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்டாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

image


2022 தீபாவளி திரைப்படங்கள் (24 அக்டோபர்):

1. சர்தார் - கார்த்தி, லைலா, ராஷிகண்ணா

2. பிரின்ஸ் - சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ்

கார்த்தி, சிவகார்த்திகேயன் இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ள நடிகர்கள் என்பதால் இருவரது படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. 

Post a Comment

Previous Post Next Post