உகண்டாவில் பார்வை குறைபாடுள்ள சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் நேற்று (25) ஏற்பட்ட தீ விபத்தில் பதினொரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நால்வர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் கம்பாலாவில் இருந்து கிழக்கில் உள்ள முகோனோவில் இருக்கும் விடுதிப் பாடசாலையில் ஏற்பட்ட இந்தத் தீக்கான காரணத்தை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான சம்பவங்கள் அரிதானதல்ல.
தீ ஏற்படும்போது பாடசாலை விடுதியில் 27 மாணவர்கள் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். விபரம் அறிந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
2008ஆம் ஆண்டு கனிஷ்ட பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் பத்தொன்பது சிறுவர்கள் உயிரிழந்தது நாட்டில் இடம்பெற்ற மோசமான சம்பவமாக உள்ளது.


Post a Comment