12,500 மெட்ரிக் தொன் யூரியாவுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்...!


12,500 மெட்ரிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல், நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் சீனாவிலிருந்து வருகை தந்துள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலி குறிப்பிட்டார்.

கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் குறித்த உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலி குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post