போர் விமானம் குடியிருப்பில் விழுந்து 13 பேர் உயிரிழப்பு…!


தெற்கு ரஷ்ய நகரான யெய்ஸ்கியில் ரஷ்ய போர் விமானம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விழுந்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த விமானம் கட்டடத்தில் மோதுவதற்கு முன் விமானிகள் இருவரும் தப்பி வெளியேறினர். விபத்தை அடுத்து கட்டடத்தில் இருந்து பாரிய தீப்பிழம்பு வெளியானது. உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள் இருப்பதாக ரஷ்ய அவசரப் பிரிவுகளுக்கான அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஒன்பது மாடிக் கட்டடத்தில் இருந்து 68 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரான யெய்ஸ்க், கிழக்கு உக்ரைனின் போர் வலயத்திற்கு அருகில் உள்ள பிரதேசமாகும்.

Post a Comment

Previous Post Next Post