2வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா...


ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - கீரின் களமிறங்கினர்.

2-வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் கீரின் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிஞ்ச் 15 ரன்னிலும் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் வெளியேறினார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் அரை சதம் அடித்தார். அவர் 75 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 20 பந்தில் 42 ரன்கள் குவித்தார்

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

Post a Comment

Previous Post Next Post