பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு இளவரசர் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் என்ற பெருமையையும் பெற்றார்.
கடந்த மாதம் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில் மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ்.
இந்நிலையில், மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழாவானது அடுத்தாண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி லண்டனில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment