ஒக்டோபர் 22 கறுப்பு தினம்: ஜம்முகாஷ்மீர் மீதான பாகிஸ்தானின் படையெடுப்பு...!


1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக கூட்டு ஒப்பந்தத்தை மீறி, பழங்குடியினரைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற ஆக்கிரமிப்பு போரை தொடங்கியது.

வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தானின் பங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட அக்டோபர் 22 ஆம் திகதியை இந்தியா 'கருப்பு தினமாக' அனுசரிக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து கொள்ளையடித்து அட்டூழியங்களைச் செய்தனர். ஜம்மு காஷ்மீர் கொள்ளையடிக்கப்பட்டு சூரையாடப்பட்டது. இந்த சம்பவமானது ஜம்மு காஷ்மீர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து இந்திய இராணுவம் மீட்புக்கு வந்தது.

பாகிஸ்தான் இராணுவம் ஒவ்வொரு பதான் பழங்குடியினருக்கும் குறைந்தது 1,000 பழங்குடியினரில் ஒரு லஷ்கரையாவது சேர்க்குமாறு அறிவுறுத்தியது. பின்னர் அவர்களை பன்னு, வன்னா, பெஷாவர், கோஹாட், தால் மற்றும் நௌஷேரா ஆகிய இடங்களில் நிலைநிறுத்தப்பட்டனர். இதன் பின்னர் பாகிஸ்தான் படைத் தளபதிகளால் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய ஆடைகள் வழங்கப்பட்டன.

ஆறு லஷ்கர் குழுக்களை முசாபராபாத்தில் இருந்து டோமல், உரி மற்றும் பாரமுல்லா வழியாக ஸ்ரீநகர் செல்லும் பிரதான சாலை வழியாக முன்னேறினர். குறிப்பிட்ட பணியுடன் விமான நிலையத்தை கைப்பற்றி பின்னர் பனிஹால் கணவாய்க்கு முன்னேறினர். இரண்டு லஷ்கர் குழுக்கள் ஹாஜிபீர் கணவாயில் இருந்து நேரடியாக குல்மார்க்கிற்குச் செல்லும்படி கூறப்பட்டனர்.

சோபோர், ஹந்த்வாரா மற்றும் பந்திப்பூர் ஆகியவற்றைக் கைப்பற்ற இரண்டு லஷ்கர் குழுக்களை அனுப்பினர். இதேபோன்ற படை தித்வாலில் இருந்து நாஸ்டாச்சுன் கணவாய் வழியாக முன்னேறச் சொல்லப்பட்டது. பூஞ்ச், ரஜோரியைக் கைப்பற்றி, பின்னர் ஜம்முவுக்கு முன்னேறும் நோக்கத்துடன் பூஞ்ச், பிம்பார் மற்றும் ராவல்கோட் பகுதியில் பத்து லஷ்கர் குழுக்கள் செயல்படும்படி கட்டளையிடப்பட்டிருந்தது.

1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி அபோட்டாபாத் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் 7 காலாட்படை பிரிவு குவிக்கப்பட்டது. மேலும் பழங்குடியின லஷ்கர் குழுக்களை பள்ளத்தாக்கில் தங்கள் பிடியை உறுதிப்படுத்தவும் உடனடியாக ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் செல்ல தயாராக இருக்குமாறும் உத்தரவிடப்பட்டது. ஜம்முவிற்கு செல்ல சியால்கோட்டில் ஒரு காலாட்படை படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிப்பாய்கள் படையெடுப்பாளர்களுடன் கலக்கப்பட்டனர். இது தாமதமான போதிலும் காஷ்மீரில் இந்தியா முன்னேற்றத்தை நிறுத்தவில்லை. படையெடுப்பாளர்கள் பாரமுல்லாவுக்குள் நுழைந்து அட்டூழியங்களைத் தொடங்கினர்.

'நிறம், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் இளம் பெண்கள் கடத்தப்பட்டனர். ஒவ்வொரு ஆயுதக் குழுக்களும் தன்னால் இயன்ற அளவு செல்வத்தை கொள்ளையிட்டதுடன் பல பெண்களையும் கடத்தி செல்ல முற்பட்டதாக முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் நினைவு கூர்ந்தார்.

ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்தின் துருப்புக்களின் ஆதரவுடன் பழங்குடியின ஆயுதக்குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து அட்டூழியங்களைக் கண்ட மகாராஜா ஹரி சிங், இந்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டு, காஷ்மீரை முறையாக இந்தியாவுடன் இணைத்தார்.

இதன் பின்னர் ஒக்டோபர் 27, 1947 அன்று, இந்திய இராணுவத்தின் முதல் காலாட்படை மற்றும் இந்திய சீக்கியரின் துருப்புக்கள் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் தரையிறங்கி, ஊடுருவல்காரர்களிடமிருந்து காஷ்மீரை விடுவிக்க போரில் ஈடுபட்டன.

பாக்கிஸ்தான் நேரடியான ஈடுபாடு இருந்தபோதிலும், ஜம்மு - காஷ்மீர் இனவாதக் கொலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பழங்குடியினரின் 'தன்னிச்சையான' தாக்குதல் என்று பாகிஸ்தான் கூறியது.

ஆனால் பழங்குடியினர் படையெடுப்பின் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் ஆவண ஆதாரங்கள் இருந்தமையால் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இராணுவ தலைமையகத்தில் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் பணிப்பாளராக இருந்த அக்பர் கானின் 'ரைடர்ஸ் இன் காஷ்மீர்' புத்தகம் பாகிஸ்தான் எவ்வாறு படையெடுப்பைத் திட்டமிட்டது மற்றும் அதில் நேரடியாக ஈடுபட்டது என்பதில் சந்தேகமில்லை என்று ஆவணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post