பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 32 பேர் பலி; உத்தரகாண்டில் சோகம்! (வீடியோ)



இந்திய உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றவர்களின் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 32 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு நேற்று பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், மலைப்பாங்கான பகுதியில் இரவு 7.30 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்திலுள்ள வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்கள், பொலிஸார் மற்றும் மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மீட்புபணிகளை தூரிதப்படுத்தும் படி முதல்வர் புஷ்கர் தாமி உத்தவிட்டுள்ளார்.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இதில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










Post a Comment

Previous Post Next Post