அமெரிக்கா: இயன் புயலால் உயிரிழப்பு 80 ஐ தாண்டியது...!


அமெரிக்காவின் புளோரிடா, வடக்கு கரோலைனா, தெற்கு கரோலைனா ஆகிய பகுதிகளில் இயன் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஐத் தாண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்கள் மீட்சியடைய பில்லியன் கணக்கான டொலர் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துக் குறைகூறப்படுகிறது.

புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இயன் புயல் தாக்கிய இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.

எனவே மீட்புக் குழுக்கள் தொலைதூரப் பகுதிகளில் தேடல் பணிகளை மேற்கொள்ள முடிவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post