எந்தெந்த சூழ்நிலைகளில் அமைதியாக இருக்கலாம்? - ஒரு இடம் பொருள் ஏவல் டிப்ஸ்...!



இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்ற வழக்கு உண்டு. அதேபோல ஒரு சில சூழ்நிலைகளில் அமைதியாக இருந்துவிட்டாலே அந்த பிரச்னையோ, நிலைமையோ அதுவாக சரியாகிவிடும் எனக் கூறப்படுவதுண்டு.

அந்த வகையில், எந்தெந்த சூழ்நிலைகளில் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து Seek Wiser என்ற ட்விட்டர் பக்கத்தில் 10 நிலைகளை குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருக்கிறது.

அவை என்னென்ன என்பதை காணலாம்:

1. நட்பை முறிக்கும் அளவுக்கு உங்களது வார்த்தைகள் இருந்தால், அந்த நிலை ஏற்படாமல் தவிர்க்க அமைதியாக இருங்கள்.

2. நீங்கள் கூறும் ஒரு வார்த்தை ஒருவரை புண்படுத்தினால் அமைதியாக இருங்கள்.

3. உச்சபட்சமாக கோபத்தில் இருக்கும் போது விடுக்கும் வார்த்தைகள் கணலை கக்குவதற்கு சமம். ஆகையால் கோபமாக இருந்தால் அமைதியாக இருங்கள்.



4. நீங்கள் கூறும் வார்த்தைகள் தவறான எண்ணத்தை வெளிப்படுத்தினால் அமைதியாக இருங்கள்.

5. எந்தவொரு விஷயம் அல்லது சம்பவம் குறித்த உண்மைநிலை என்னவென்று தெரியாமல் போனாலோ, உண்மைகள் உங்களிடம் இல்லாதபோது அமைதியாக இருங்கள்.

6. நீங்கள் மோசமான நிலையில் இருப்பதாக உணர்ந்தால் அமைதியாக இருங்கள்.

7. நீங்கள் நலம்விரும்பியாக நினைக்கும் ஒருவரோ அல்லது எவரேனும் உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிகாவிட்டால் அமைதியாக இருங்கள்.

8. உங்களுடைய கருத்தை பொருட்படுத்தாமல் இருக்கும் இடத்தில் அமைதியாக இருங்கள்.

9. உங்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லைது முடியாத நிலையில் இருந்தால் அமைதியாக இருங்கள்.

10. உங்களுடைய மன ரீதியான உணர்ச்சிகள் அதிகமாக இயங்கும் போது அமைதியாக இருங்கள்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post