- ஒரு நாள் சேவைக்கான மேலதிக கட்டணம் ரூ. 500 இலிருந்து ரூ. 1,000 - 1,200 ஆக அதிகரிப்பு
- அமைச்சர் பந்துல குணவர்தன அதி விசேட வர்த்தமானி வெளியீடு
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், செல்லுபடியாகும் காலத்தை புதுப்பித்தல் அல்லது நீடித்தல், ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் 44, 123, 124, 125, 126, 126ஆ, 128, 132, 132அ, 231 என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கமைய குறித்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பழைய கட்டணங்கள் வருமாறு
சேவைகள் | |
---|---|
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் - ஒரு வாகன வகுப்புக்கு | 1700.00 |
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் - 02 வாகன வகுப்புக்கு | 2000.00 |
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் - 03 வாகன வகுப்புக்கு அல்லது அதற்கு மே | 2250.00 |
எழுத்து மூலமான பரீட்சைக்கு மீண்டும் விண்ணப்பித்தல் | 250.00 |
செயல் ரீதியான பரீட்சைக்கு மீண்டும் விண்ணப்பித்தல் | 500.00 |
சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதை தாமதித்தல் ஒரு வருடத்துக்கான தண்டப்பணம் | 250.00 |
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பொன்றை உள்ளடக்குதல் | 1700.00 |
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிதாக 02 வாகன வகுப்புக்களை உள்ளடக்குதல் | 2000.00 |
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிதாக 02 வாகன வகுப்புக்களை உள்ளடக்குதல் | 2250.00 |
சாரதி அனுமதிப் பத்திரத்தின் சொந்த விபரங்களை மாற்றியமைத்தல் | 250.00 |
சாரதி அனுமதிப் பத்திரத்தின் பொழிப்பை (விபரக் குறிப்பை) பெற்றுக் கொள்ளல் | 500.00 |
பழைய நடைமுறைக்கமைய வழங்கப்பட்டுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை புதிய நடைமுறைக்கேட்ப திருத்தியமைத்தல் | 1700.00 |
வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குதல் (இலங்கையர்களுக்கு) | 2500.00 |
வெளிநாட்டு தூதரக சேவையின் அலுவலர்களுக்கு | 1700.00 |
வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குதல் (வெளிநாட்டவர்களுக்கு) | 10000.00 |
வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் தற்காலிகமாக உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குதல் ஒரு மாத காலப் பகுதிக்கு (வெளிநாட்டவர்களுக்கு) | 1000.00 |
வெளிநாட்டவருக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல் | 15000.00 |
ஒரு நாள் சேவைக்கான மேலதிகக் கட்டணம் | 500.00 |
புதிய கட்டணங்களுடனான அதி விசேட வர்த்தமானி
Post a Comment