பெற்றோலின் விலை குறைவடைந்துள்ள நிலையில், டீசலின் விலையையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
அவ்வாறு டீசல் விலை குறைக்கப்படுமானால் அதன் பிரதிபலனை சாதாரண மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அந்த சங்கம்தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க ஒக்டேன் 92ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 40ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் ஒக்டேன் 95ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 30ரூபா வால்குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே டீசலின் விலையையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
எவ்வாறெனினும் பெட்ரோல் விலைகள் குறைவடைந்தாலும் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை உடனடியாக குறைக்க முடியாது என முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Post a Comment