பருவநிலை நெருக்கடியால் சுகாதாரம் பாதிப்பு...!


உலக அளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை நெருக்கடியால் உணவு, எரிசக்தி, செலவினம் அதிகரித்ததோடு மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சுகாதாரம், பருவநிலை மாற்றம் ஆகியவை தொடர்பில் நடத்தப்பட்ட வருடாந்த அறிக்கையை லன்செட் கெளன்டவுன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக வெப்பமயமாதலைக் கையாள்வதற்குச் சுகாதாரம் மீது கவனம் செலுத்த அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

வெப்பநிலை அதிகரிக்க, உலக வரட்சி கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 33 வீதம் மோசமடைந்திருப்பதாய் கூறப்படுகிறது. வேளாண்மை, வீட்டு வசதி, வாழ்வாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பைக் காட்டிலும் தற்போது சுமார் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மோசமான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் பருவநிலை இலக்குகளை அதிகரிக்கவும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

சிங்கப்பூர் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஹைட்ரஜன் எனப்படும் நீரக வாயுவைப் பயன்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post