இலங்கையை வந்தடையும் இரு சீன விமானங்கள்...!


சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய 2 விமானங்கள் இலங்கைக்கு இன்று (27) வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட குறித்த மருந்துகள் சுமார் 35 மில்லியன் ரிங்கிட் (ரூ.1.8 பில்லியன்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் 23 மில்லியன் ரிங்கிட் (ரூ.1.2 பில்லியன்) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை சீனா இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post