காத்தான்குடி பிரதேசத்தில் கத்திக்குத்து...!


14 வயதான சிறுவன் மீது 20 வயதான இளைஞர் ஒருவர் கத்தியால் குதியதையடுத்து சிறுவன் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கத்திக்குத்து தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் இளைஞரை காத்தான்குடி பொலிஸார. கைது செய்துள்ளனர்.

இந்தச சம்பவம் காத்தான்குடி கர்பலா பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சம்பவத்தில் காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post