அமெரிக்க துப்பாக்கி சூட்டில் ஐவர் பலி...!


வடக்கு கரோலினாவில் கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பணியில் இல்லாத பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரைத் தேடுவதற்கு நகரத்தின் சில பகுதிகள் பல மணிநேரம் மூடப்பட்டிருந்தன.

துப்பாக்கிச் சூட்டால் இருவர் காயமுற்றனர். ஒருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மற்றொருவர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 34,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமானவை தற்கொலைகளாகும்.

Post a Comment

Previous Post Next Post