அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அமைச்சர் விளக்கம்...!


அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்களைத் தூண்டி விடுவதற்காக சிலர் மேற்கொள்ளும் இத்தகைய பிரச்சாரங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச ஊழியர்களின் தொழிலை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post