ஜெயந்தியாய கிங் ஸ்டார் விளையாட்டு கழகம் நடாத்திய சீருடை அறிமுக விழாவில் அதிதியாக சட்டத்தரணி ஹபீப் றிபான் கலந்து கொண்டார்.
இன்று 07.10.2022 ஜெயந்தியாய கிங் ஸ்டார் விளையாட்டு கழகம் நடாத்திய புதிய சீருடை அறிமுக விழா அதன் தலைவர் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் றஹீம் முஹம்மட் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சட்டத்தரணி ஹபீப் றிபான் அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கிங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் உப தலைவர் தௌபீக், ஜெயந்தியாய ஜும்மா பள்ளிவாயல் தலைவர் நளீம், ஸல் சபீல் விளையாட்டு கழக தலைவர் கரீம்,லேஜன்ட் விளையாட்டு கழக தலைவர் அன்சார்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சித்தீக் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment