சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அறிவிப்பாணை வெளியிட்டது.
சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை வழங்குவதில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களின் முடிவுகளுக்கு எதிராக பயனாளிகள் கொண்டிருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய மேல்முறையீட்டுக் குழுக்களை அமைக்கும் விதிகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குறைகள் மேல்முறையீட்டுக் குழு மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று MeitY (மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தெரிவித்துள்ளது. மேலும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் பெற்ற 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டரில், " பயனர்களை மேம்படுத்துதல்... இடைத்தரகரால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக புகார் மேல்முறையீட்டுக் குழு (ஜிஏசி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Post a Comment