வர்த்தக அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!


இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை திறந்த கணக்கு முறையின் ஊடாக இலங்கைக்குள் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. 

வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் வழங்குவதற்காக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இங்கு பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post