
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றும் (19) களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறு கோரி நேற்று களனியில் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இன்றைய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவெளை, ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கூடி எதிர்ப்பில் ஈடுபட்டது.
அடுக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, களனியில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க உள்ளிட்ட 8 பேரும் தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Post a Comment