இஸ்ரேலியத் தலைநகரம்: முடிவை மாற்றியது ஆஸி..!

 

மேற்கு ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்று அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.

அவுஸ்திரேலியாவின் தூதரகம் டெல் அவிவ் நகரில் தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தலைமையில் அவுஸ்திரேலியா மேற்கு ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது.

அப்போது சிட்னி நகரில் யூதர்கள் அதிகம் இருந்த பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற மொரிசன் அரசு அந்த முடிவை எடுத்ததாக வோங் குறைகூறினார்.

Post a Comment

Previous Post Next Post