புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்ட வழிகளில் பணம் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
30.04.2023 வரை அல்லது வாகன இறக்குமதிக்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரை அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணி மதிப்பில் 50% CIF மதிப்புள்ள இரு சக்கர மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
04.05.2022 முதல் 31.12.2023 வரை, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணியின் மதிப்பில் 50% வரையிலான CIF மதிப்பைக் கொண்ட நான்கு சக்கர மின்சார வாகன இறக்குமதியும் அனுமதிக்கப்படுகிறது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொழிலாளர் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment