ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி...!


இலங்கை மற்றும் உலக முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது நபி அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய அவரது உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

உயர்ந்த மனிதப் பண்புகளுடன் பிறந்த அனைவரும் ஒருவரையொருவர் விலகிச்செல்ல முற்படுவதை தவிர்த்து, நபிகளாரின் போதனையைப் பின்பற்றி அனைவரும் புரிந்துணர்வுடன் நடப்பதே அவருக்குச் செய்யும் கௌரவமாகும்.

ஒட்டுமொத்த மனித சமூகத்தைப் போன்று ஏனைய அனைத்தினதும் பாதுகாப்பு, பயன்பாடு, மரியாதை மற்றும் நேர்மை பற்றிய முஹம்மத் நபி அவர்களின் கருத்து உண்மையின் உருவகமாகும். அவர்களின் போதனைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஆன்மீக ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

அல் அமீன் "நம்பிக்கையாளர்" என்ற புனைப்பெயர் கொண்ட முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாள், இலங்கை மற்றும் உலகலாவிய முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனையோர்களினதும் ஆன்மீக, சமூக முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

Post a Comment

Previous Post Next Post