உணவு நெருக்கடியால் மலையகமே மோசமாக பாதிப்பு - உலக உணவுத் திட்டம்...!


இலங்கையில் மலையகத்திலேயே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் தேயிலை உற்பத்தி தொழிற்துறையே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மையை கொண்டுள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

பெண்கள்தலைமைத்துவ குடும்பங்கள் கல்வியறிவற்ற குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் மத்தியிலும் அதிகளவு உணவுபாதுகாப்பின்மை காணப்படுகின்றது என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி பற்றாக்குறை அதிகரிக்கும் விலைகள் வாழ்வாதார குழப்பங்கள் குடும்பங்களின் கொள்வனவு சக்தி குறைவடைந்துள்ளமைபோன்றவற்றால்

மிகமோசமான உணவுப்பாதுகாப்பின்மை பெருமளவு அதிகரித்துள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post