
கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் உள்ள புகைப்படத்தை தொடுதிரை மூலம் உணரக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி பேராசிரியர், மாணவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் பேராசிரியர் மணிவண்ணன் முனியாண்டி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், தொடுதிரை மூலம் உணரும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். ஐ டாட் (i.Tod) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை டச் ஸ்கிரீன் இந்தியாவில் உள்ள ஒரே தொடுதிரை ஆய்வகமான சென்னை ஐஐடியில் கண்டறியப்பட்டுள்ளது. தொடுதிரையில் உள்ள படத்தில் என்ன இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல் இந்த தொழில்நுட்பம் விரலுக்கு உணர்வை கடத்தும். உதாரணமாக மணல் போன்ற படம் இருந்தால், திரையை தொடும்போது மணலை தொடுவது போல் உணர முடியும்.

இந்த தொழில்நுட்பம் மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன், கணினியை மிக எளிதாக பயன்படுத்த முடியும் என்கிறார் ஆராய்ச்சி மாணவர் ஜெகன். தற்போது முதல்கட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அனைத்து படங்களையும் தொடுதிரை மூலம் உணரும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
Post a Comment