பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று(03) காலை முதல் குறித்த மாணவர் காணாமல் போயுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதான புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த குறித்த மாணவனை கடந்த 02ஆம் திகதியே இறுதியாக கண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நன்றி...
News1st


Post a Comment