தீபாவளி பண்டிகையையிட்டு நாளை (24) திங்கட்கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பண்டிகை தினங்கள் மற்றும் மத ரீதியான அனுஷ்டான தினங்களில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் நாளை (24) இந்துக்கள் தீபாவளி பண்டிகையை அனுஷ்டிப்பதனால் அன்றையதினம் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று ஒக்டோபர் 23ஆம் திகதி ஒரே தடவையில் 1 மணித்தியாலம் மற்றும் 20 நிமிட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
ABCDEFGHIJKL | PQRSTUVW :
பி.ப. 5.00 - இரவு 9.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
Post a Comment