கிரிக்கெட் வீரர் தோனி பட நிறுவனம் தொடங்கி சினிமாவுக்கு வருகிறார். முதல் படமாக தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு அவரது மனைவி சாக் ஷி கதை எழுதி உள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேசி வருவதாக தகவல் பரவியது. பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. இந்த நிலையில் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேசி வருகிறார்கள். நாயகன், நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி டைரக்டு செய்கிறார். காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், பியார் பிரேமா காதல், கசட தபற உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
Post a Comment