
கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழுக்களுக்கு தலா 22 எம்.பிக்கள் பெயர்களை பாராளுமன்ற தெரிவுக்குழு பெயரிடப்பட்டதற்கு அமைய, சபாநாயகர் இன்றையதினம் (03) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
கோப் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் (COPE)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல் 2022 ஓகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE)
- ஜகத் புஷ்பகுமார
- ஜானக வக்கும்புர
- லொஹான் ரத்வத்தே
- இந்திக அனுருத்த ஹேரத்
- டி.வீ. சானக
- சாந்த பண்டார
- அநுர திசாநாயக்க
- ரஊப் ஹக்கீம்
- பாட்டலி சம்பிக ரணவக்க
- மஹிந்தானந்த அலுத்கமகே
- ரோஹித அபேகுணவர்தன
- கலாநிதி ஹர்ஷ டி சில்வா
- இரான் விக்ரமரத்ன
- நிமல் லான்சா
- எஸ்.எம்.எம். முஸ்ஸாரப்
- நலீன் பண்டார ஜயமஹ
- எஸ்.எம். மரிக்கார்
- முஜிபுர் ரஹுமான்
- திருமதி ரோஹினீ குமாரி விஜேரத்ன
- சஞ்ஜீவ எதிரிமான்ன
- ஜகத் புஷ்பகுமார
- பிரேம்நாத் சி. தொலவத்த
- உபுல் மஹேந்திர ராஜபக்ஷ
- சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
- திருமதி ராஜிகா விக்ரமசிங்ஹ
- மதுர விதானகே
- பேராசிரியர் ரஞ்சித் பண்டார
கோபா குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஓகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல் 2022 ஓகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் (COPA)
- மொஹான் பிரியதர்ஷன த சில்வா
- லசந்த அலகியவன்ன
- கே. காதர் மஸ்தான்
- (கலாநிதி) சுரேன் ராகவன்
- டயனா கமகே
- எஸ். பீ. திசாநாயக்க
- திஸ்ஸ அத்தநாயக்க
- கபிர் ஹசீம்
- கலாநிதி சரத் வீரசேக்கர
- விமலவீர திசாநாயக்க
- நிரோஷன் பெரேரா
- டாக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே
- ஜே.சீ. அலவத்துவல
- அசோக அபேசிங்ஹ
- புத்திக பத்திரண
- ஜயந்த சமரவீர
- ஹெக்டர் அப்புஹாமி
- ஹேஷா விதானகே
- கலாநிதி மேஜர் பிரதீப் உந்துகொட
- இசுரு தொடன்கொட
- வசந்த யாப்பாபண்டார
- சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
- எம்.டப்ளியு.டீ. சஹன் பிரதீப் விதான
- டீ. வீரசிங்க
- வீரசுமன வீரசிங்ஹ
- பேராசிரியர் சரித்த ஹேரத்
- கலாநிதி ஹரினி அமரசூரிய
முன்னோள் கோப் குழு தலைவர் விசனம்:
இதேவேளை, இதற்கு முன்னர் கோப் குழு தலைவராக செயற்பட்டிருந்த பேராசிரியர் சரித்த ஹேரத், கோப் குழுவில் உள்வாங்கப்படாமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடரபில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர்,
2 மாத காலம் தாமப்படுத்தி தற்போது கோப் குழுவுக்கான உறுப்பினர்கள் வெளியிடப்பட்டுள்ளது. நான் நினைத்தது போல் எனது பெயர் அதில் இல்லை. திருடர்கள், தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துள்ளவர்கள், மோசடிக்கு ஆதரவானவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பொருளாதார குற்றங்களுக்கு பின்னாலுள்ளவர்களுக்கு என்னை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமரே வெட்கமாக உள்ளது.

Post a Comment