தற்போதுள்ள முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்கிறது என அக்கட்சியின் பதில் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து நிற்போம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ´ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்´ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இன்று (08) முற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, பியல் நிஷாந்த, சனத் நிஷாந்த, அனுப பஸ்குவேல் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொகுகே, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் பாராளுமன்றத்தில் ஒரு குழுவில் இணைந்துள்ளனர்..
நன்றி...
அததெரண
Post a Comment