அயர்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக நியூசிலாந்து 186 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்ஸன் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அயர்லாந்து அணி சார்பாக பந்து வீச்சில் ஜெஷ் லிட்டில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில், அயர்லாந்து வெற்றி பெற வேண்டுமானால் 20 ஓவர்களில் 186 ஓட்டங்களை பெற வேண்டும்.
Post a Comment