2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான ஆரம்ப உரையை (வரவுசெலவுத்திட்ட உரை) ஜனாதிபதியும், நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று மு.ப 1.30 மணிக்குப் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நாளை (15) ஆரம்பமாகவிருப்பதுடன், இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் தினமும் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையும் நடைபெறவிருப்பதுடன், அதன் பின்னர் பி.ப 5.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப் பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி அல்லது சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.
இதன் பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டுமூலம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன் இது டிசம்பர் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன் மீதான விவாதம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை நடைபெறும். இதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி பி.ப 7.00 மணிக்கு நடைபெறும்.
இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.
வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளக்காக நேரம் ஒதுக்கப்படவில்லை.
Post a Comment