குஜராத் சட்டசபை தேர்தலில் 21 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு...!

குஜராத் சட்டசபை தேர்தல், டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் நடக்கிறது.

குஜராத் சட்டசபை தேர்தல், டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் நடக்கிறது. அங்கு மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது.

இந்தநிலையில், 46 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை நேற்று வெளியிட்டது. இத்துடன், இதுவரை முதல்கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளில் 68 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இன்னும் 21 வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி இருக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட 46 வேட்பாளர்களில், 21 பேர் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் ஆவர். இப்பட்டியலில், 4 முஸ்லிம் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். 

இதற்கிடையே, குஜராத் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, உம்ரத், நரோடா, தேவ்கத் பரியா ஆகிய 3 தொகுதிகள், தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகளும், பா.ஜனதா வசம் உள்ளவை ஆகும்.

Post a Comment

Previous Post Next Post