இந்தோனேசிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்வு..!


இந்தோனேசியாவில் திங்கட்கிழமை (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவானது.

பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் அந்த பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன.

சியாஞ்சூா் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து வீழ்ந்த கட்டடங்களின் இடிபாடுகள் இடையே சிக்கியுள்ள பலரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், காணாமற்போன 32 பேரைத் தேடி வருவதாகவும் இதில் 377 பேர் காயமடைந்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post