தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்த விபத்தில் 3 பேர் பலி; 26 பேர் மீட்பு...!




மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 3 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொலைந்த 20 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post