43 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில்…!



பெண்கள் பாடசாலை ஒன்றில் 43 மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாத்தளை, கூம்பியங்கொட பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த 43 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று (15) காலை திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் 29 மாணவிகள் சிகிச்சை பெற்று தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

14 மாணவிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post