துருக்கியில் எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் 81 பேர் காயமடைந்த மத்திய இஸ்தன்பூலில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் துருக்கியின் மிகப்பெரிய நகரில் பரபரப்பான இஸ்திகாலால் ஒழுங்கையில் குண்டை வைத்துச் சென்ற நபரும் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் சுலைமான் சைலு நேற்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று வயது சிறுமி மற்றும் அவரது தந்தையும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி மீது உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
Post a Comment