இனிப்பு வகைகள் தொடர்பில் முறைப்பாடு...!


வௌிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் (Toffee) தரத்தை பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வௌிநாடுகளில் இருந்து உரிய முறையை பின்பற்றாது கொண்டுவரப்படும் இனிப்பு பண்டங்களின் தரம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்கலன்களில் இவை நாட்டிற்கு கொண்டுவரப்படுவதில்லை என்பதால், துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இனிப்பு வகைகள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான இனிப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகளைப் பெற்று, அவற்றின் தரம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post