சுற்றுலா விசாவில் தொழில் நிமித்தம் வௌிநாடு செல்ல வேண்டாம் – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...!


சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் சென்றவர்களில் சிலர் தொழிலின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள நபர்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post