இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பிலும் ட்ரம்ப் மோசடி குற்றச்சாட்டு…!


அமெரிக்காவில் நேற்று வாக்களிப்பு நடைபெற்ற தேர்தல்களில் மோசடி இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இத்தேர்தல்களின் வெற்றி தனது குடியரசுக் கட்சியினரிடமிருந்து திருடப்படுவதாக 'ட்ருத் சோஷல்' எனும் தனது சமூக வலைதளத்தில் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

இத்தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு வேட்பாளர் அல்லர். ஆனால், இத்தேர்தல்களில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான அறிவிப்பை அவர் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post