திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி... ஆறு கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு...!



ஆந்திராவில் டிராக்டர் மீது உயர் மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 6 கூலித் தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் டிராக்டரில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக சாலையின் குறுக்கே சென்ற உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து, அவர்கள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது விழுந்துள்ளது.



இதில், டிராக்டரில் பயணித்த 6 பேர் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற அனந்தபுரம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post