நிதிக் கொள்கை தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம்



இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதே மட்டத்தில் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற நாணய சபையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதத்தை 14.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 15.50% ஆகவும் அதே மட்டத்தில் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post